Nila FM


How to improve your knowledge

Prepare your own dictionary of words. Every day, try to write down some of the key new words that you have mastered that day. Go through this dictionary once a week so that you recall the meanings of these words and they permanently stick in your memory. Every time you go through this dictionary, visualize the meaning of those words. For example, for the word "hallucination," try to imagine what the word actually means - you might try to picture someone having a nightmarish dream while awake perhaps. This visualization method will make you understand the subtle differences between similar words such as "consent" and "permission," while also accepting that English has such a rich vocabulary that often you simply need to learn as many new words as possible that all carry similar or identical meanings!

Sunday, April 17, 2011

பயர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்


பயர்பொக்ஸ் வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

பொதுவாக பயர்பொக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.

1. பார்த்த பக்கங்களின் வரலாறை நீக்குதல்: நீங்கள் வலை உலவியில் உலவிய பக்கங்களைப் பற்றிய வரலாறும் ஒவ்வொரு இணையதளங்களாலும் ஏற்படுத்தப்படுகிற குக்கிகளும் அதிகமாக சேர்ந்து விடுவது பயர்பொக்சின் வேகத்தைக் குறைக்கலாம். அதனால் அடிக்கடி Clear History கொடுத்து வரலாறை நீக்கி விடுங்கள். Tools->Options சென்று இதனைச் செய்யலாம்.

2. புக்மார்க்குகளை குறைத்தல்: ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்பர். இது பின்னாளில் எளிதாக அந்த இணையதளத்தை அணுக உதவியாக இருக்கும்.

ஆனால் அதிகமான எண்ணிக்கையில் புக்மார்க்குகள் சேர்ந்து விடுவது பயர்பொக்ஸ் ஆரம்பிக்கும் வேகத்தைக் குறைக்கிறது. எனவே முக்கிய இணையதளங்களை மட்டும் வைத்துக் கொள்வது நலமானது.

3. ஆட் ஆன் தொகுப்புகள்: பயர்பொக்சின் சிறப்பே அதன் ஆட் ஆன் தொகுப்புகள் தான். ஆட் ஆன் தொகுப்புகள் உலவிக்கு மேம்பட்ட சிறப்பைக் கொடுக்கிறது. பல வேலைகளுக்குப் பயன்படும் ஆட் ஆன் தொகுப்புகளும் அளவான எண்ணிக்கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தாத ஆட் ஆன் தொகுப்புகளை நீக்கி விட வேண்டும்.

4. Places Database இல் உள்ள தகவல்களை நீக்குதல்: உங்கள் வலை உலவியில் நீங்கள் பயன்படுத்தும் புக்மார்க்குகள், பக்கங்களின் வரலாறு, குக்கிகள் எல்லாமே பயர்பாக்சின் Places என்ற தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். இவற்றை அவ்வப்போது நீக்குவதும் வேகத்தை அதிகப்படுத்தும்.

இந்த தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை நீக்க ஒரு சிறப்பான ஆட் ஆன் உள்ளது. Vacuum Places என்ற இந்த ஆட் ஆன் பயர்பொக்ஸ் ஆரம்பிக்கும் ஒவ்வொரு 30 வது தடவைக்கும் தானாகவே Places தரவுத்தளத்தில் உள்ள தகவல்களை அழித்துவிடும்.

No comments:

Post a Comment